நடிகை மீனா மீது பித்துபிடித்து அலைந்த சினேகாவின் கணவர்.. திருமணத்திற்கு முன் அப்படியொரு காதல்..
தமிழ் சினிமாவில் 1982ல் வெளியான நெஞ்சங்கள் என்ற படத்தின் மூலம் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்தவர் நடிகை மீனா. இப்படத்தினை தொடர்ந்து ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன்பின் வீரா, முத்து, எஜமான் போன்ற படங்களில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக சிறுவயதில் நடிக்க ஆரம்பித்தார் மீனா.
அதன்பின் அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். மீனா பல ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் ஃபேவரெட் நடிகையாக திகழ்ந்து மனதை ஈர்த்து வந்தார். தற்போது சினிமாவில் அறிமுகமாகி 40 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார்.
அதற்காக கெளரவிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது, நடிகரும் சினேகாவின் கணவருமான பிரசன்னா மேடையில் பேசியிருக்கிறார். மீனாவில் பெரிய ரசிகன் நான்.
எந்தளவிற்கு என்றால் மீனாவுடன் ஜோடியாக ரஜினிகாந்தை தவிர வேறு யாரும் நடிக்கக்கூடாது. அப்படி நடித்தால் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியொரு பொசஸிவ். எஜமான் படத்தை பார்க்க டிக்கெட் கிடைக்கவில்லை என்று சென்னையில் இருந்து ரயிலில் பயணம் செய்து கரூரில் பார்க்க சென்றதாகவு கூறியிருக்கிறார்.
எனக்கு மீனா மீது அப்படியொரு பைத்தியக்காரத்தனமான அன்பு இருந்ததாக மேடையில் பிரசன்னா கூறியுள்ளார். இதை கேட்ட அவரின் மனைவி சினேகா ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்துள்ளார்.
அதற்கு சினேகா நிகழ்ச்சிக்காக பிரசன்னா பொய் சொல்லவில்லை, என்னிடமே அதை கூறியிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். இப்படி ஒப்பனா சொல்லிட்டாரே என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.