பிரசன்னாவுக்கு பிடித்த நடிகைகள் இவங்கதானாம்!! மேடையில் கோபப்பட்டு திட்டிய நடிகை சினேகா..
தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னி நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை சினேகா. முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து கொடிக்கட்டி பறந்து வந்த நடிகை சினேகா, நடிகர் பிரசன்னாவை 2009ல் காதலித்து 2012ல் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் சினிமாவில் கதாநாயகியாக நடிப்பதை நிறுத்திவிட்டு இரு குழந்தைகளை பெற்றெடுத்தார்.

இதற்கிடையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்த சினேகா பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். தற்போது குணச்சித்திர ரோலில் நடித்தும் நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்தும் வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த விருதுவிழாவில் சினேகாவுடன் ஜோடியாக பங்கு கொண்ட பிரசன்னாவிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது.
அப்போது, பிடித்த நடிகை யார் என்று கேட்டதற்கு பிரசன்னா, நடிகை தமன்னா என்று கூறியிருந்தார். ஆனால் சினேகா நான் தான் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் பயந்து போன பிரசன்னா, எதுவாக இருந்தாலும் வீட்ல போய் பேசலாம்மா என்று கெஞ்சியுள்ளர். ஆனால் சினேகா அதன்பின், அவருக்கு நான் இல்லாமல் தமன்னா பிடிக்கும் ஹன்சிகா பிடிக்கும் எல்லாமே பிடிக்கும் என்று கோபப்பட்டுள்ளார்.