ஏர் ஹோஸ்ட் பெண்ணை ஏமற்றிய கழட்டிவிட்ட நடிகர் பிரசாந்த்.. போலிஸ் வரை சென்று இலங்கைப்பெண்
தமிழ் சினிமாவில் ஜாக்லேட் பாயாக திகழ்ந்து பெண் ரசிகர்களை தன் நடிப்பால் ஈர்த்தவர் நடிகர் பிரசாந்த். 90களில் அவர் நடித்து வெளியான படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து வந்தது. இடையில் திருமணம், விவாகரத்து, பிஷ்னஸ் என்று பிஸியாக வேறொரு ரூட்டுக்கு மாறிவிட்டார்.
தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் , ஸ்விட்சர்லாந்து ஏர்போட்டில் பணியாற்றும் இலங்கையை சேர்ந்த குமுதினி என்ற பெண் பாண்டிபஜார் காவல் நிலையத்திற்கு வாய் மொழியாக புகார் ஒன்றினை அளித்துள்ளார்.
அதில் நடிஅக்ர் பிரசாந்த் 10 லட்ச ரூபாயை வாங்கி மோசடி செய்துள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுத்து என் பணத்தை வாங்கி கொடுக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை சினிமாவில் நடிக்க ஆரம்பித்தது முதல் எந்த சர்ச்சையிலும் கிசுகிசுக்களிலும் சிக்காத பிரசாந்த் மீது புகார் வந்துள்ளதே என்று இந்த செய்தியை கேட்டு தமிழ் திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதுகுறித்து, பிரசாந்த் தந்தை தியாகராஜனின் உதவியாளர் அந்த பெண் பிரசாந்த் பெயரை கெடுக்க வேண்டுமென்றே பொய்யான புகாரை அளித்துள்ளார் என்று அப்பெண் மீது வழக்கு தொடுத்துள்ளனர். என்ன நடந்தது என்று போலிசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.