திருமணமாகாமல் கர்ப்பம்..காசு இல்லாதமல் தவித்த நடிகை நீனாவுக்கு வாழ்க்கை கொடுத்த நடிகர்..

Bollywood Indian Actress West Indies cricket team Actress
By Edward Mar 25, 2026 11:09 AM GMT
Report

நீனா குப்தா

பாலிவுட் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகை நீனா குப்தா, சமீபத்தில் 60 வயதில் கர்ப்பமாக இருக்கிறார் என்று தகவல் வெளியாகியது. தான் கர்ப்பமாக இல்லை, என் உடல் எடை அப்படித்தான் என்று கூறி விளக்கம் அளித்தார். ஆனால், திருமணமாகி கர்ப்பமானபோது நீனா குப்தா அனுபவித்த பல சவால்கள் தற்போது இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான விவியன் ரிச்சர்ஸுக்கும் நீனாவுக்கும் இடையே காதல் ஏற்பட, ஏற்கனவே திருமணமான ரிச்சர்ஸ் மூலம் கர்ப்பமும் ஆனார். அந்த கருவை கலைக்குமாறும் பலரும் அவருக்கு அறிவுரை கூறியும் கேட்காமல் நான் குழந்தையை பெற்றெடுப்பேன் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். திருமணமான ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பில் உருவான குழந்தையை பெற்றெடுக்கப் போகிறாயா என்று குடும்பத்தினர் யாரும் அவருக்கு ஆதரவளிக்கவில்லை.

அறுவை சிகிச்சை

தனி ஆளாக சமாளித்தபோது நீனாவின் வங்கி கணக்கில் வெறும் 2 ஆயிரம் ரூபாய் தான் இருந்துள்ளது. தன் வாழ்க்கை பற்றி எழுதிய புத்தகத்தில் பிரசவம் குறித்து அவர் கூறுகையில், பிரசவ தேதி நெருங்கியபோது கவலையாக இருந்தது, ஏனென்றால் என் வங்கி கணக்கில் குறைவான அளவே பணம் இருந்தது. சுக பிரசவம் நடந்தால் ரூ.2 ஆயிரம் செலவாகும். என்னிடம் அவ்வளவு தான் இருந்தது.

ஆனால் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுத்தால் கஷ்டம், ஏனென்றால் அறுவை சிகிச்சைக்கு ரூ. 10 ஆயிரம் தேவைப்படும். நல்ல வேளையாக கடைசி நேரத்தில் வருமான வரி ரீஃபண்டாக ரூ. 9 ஆயிரம் கிடைத்தது. பிரசவத்தின்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்ல, நல்ல வேளையாக பணம் இருந்ததால் சந்தோஷப்பட்டேன்.

தான் திருமணமாகாமல் தாயானதை மகள் மசாபா குப்தாவிடம் நீனா மறைக்கவில்லை. மகளிடம் எந்த பொய்யும் சொல்லக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

ஆனால் மசாபா பள்ளியில் படித்தபோது அவரின் பிறப்பு குறித்து செய்தி கசிந்துவிட சக மாணவ, மாணவியர் அவரிடம் பேசாமல் ஒதுங்கியிருந்தார்கள். அது ரொம்ப வேதனையாக இருந்தது என்று ஒரு முறை மசாபா குப்தா பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கை கொடுத்த நடிகர்

நீனா குப்தா கர்ப்பமான தகவல் நடிகரும் அவரது நண்பருடமான மறைந்த நடிகர் சதீஷ் கெளஷிக், தந்தை இல்லாமல் குழந்தை பிறந்தால் அது ரொம்ப கஷ்டம், திருமணமாகாத நீ தயாகியிருப்பது எல்லோருக்கும் தெரியவந்தால் பிரச்சனை என்பதால் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன். நீ சுமக்கும் குழந்தைக்கு நான் தான் அப்பா என்று இந்த உலகிற்கு சொல்கிறேன், வயிற்றில் வளரும் குழந்தையை பற்றி நீ கவலைப்படாதே என்று கூறியிருக்கிறார். இந்த தகவலையும் நீனா குப்தா அவரின் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது.