ப்ரீத்தி முகுந்தன் குடும்ப சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

Preity Mukhundhan
By Tony Jul 19, 2026 02:30 PM GMT
Report

ப்ரீத்தி முகுந்தன் தமிழ் சினிமாவில் வேகவேகமாக வளர்ந்து வரும் நடிகை. ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தாலும் சமீபத்தில் வந்த ப்ளாஸ்ட் படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது மட்டுமில்லாமல் பெரிய ரசிகர்கள் வட்டத்தையும் உருவாக்கியது.

அதோடு சமீபத்தில் இவர் நடிப்பில் வந்த இதயம் முரளி படமும் சூப்பர் ஹிட் ஆக, அடுத்த தனுஷ் படத்தில் ப்ரீத்தி நடிக்க பேச்சு வார்த்தை நடக்கிறதாம்.

[72W0NT

இந்நிலையில் இவர் கணிதமேதை ராமானுஜம் அவர்களின் பேத்தி என்ற செய்தி இணையத்தில் உலா வர, இந்த சர்ச்சைக்கு தற்போது முற்றுபுள்ளி கிடைத்துள்ளது.

இவர் ராமானுஜம் அவர்களின் பேத்தி இல்லை, ராமானுஜம் மனைவி தத்தெடுத்த மகன் நாரயணின் அவர்களின் குடும்பத்தை சார்ந்தவர் தான் இந்த ப்ரீத்தி என தெரியவந்துள்ளது.