மகளை பார்க்க விடமாட்றாங்க..கொன்னுடுவேன்னு மிரட்டுறாங்க!! நடிகை பிரேம பிரியா பரபரப்பு புகார்..

Gossip Today Tamil Actress Actress Viluppuram
By Jai Sep 27, 2026 09:00 AM GMT
Report

பிரேம பிரியா

சென்னை சாலி கிராமத்தை சேர்ந்த துணை நடிகை பிரேம பிரியா, பல படங்களில் துணை நடிகையாகவும், நகைச்சுவை நடிகையாகவும் நடித்து வந்தார். இவர் சொந்த ஊரான விழுப்புரம் அடுத்த அயினம்பாளையம் பகுதியில் இடம் வாங்கி வீட்ய் கட்டி வசித்து வருகிறார்.

மகளை பார்க்க விடமாட்றாங்க..கொன்னுடுவேன்னு மிரட்டுறாங்க!! நடிகை பிரேம பிரியா பரபரப்பு புகார்.. | Premapriya Complaint Against Daughter Husband Rela

பிரேம பிரியாவின் 20 வயது மகள் பவானிக்கும், விழுப்புரத்தை சேர்ந்த பிரவீன் குமாருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதன்பின் பிரவீன்குமார் கஞ்சா வழக்கில் கைதானதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி பிரேம பிரியாவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்று மகள் பவானியிடம் கூற, இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பவானி கோபித்துக் கொண்டு நிச்சயம் செய்த பிரவீன் குமார் வீட்டிற்கே செல்ல, பின் இருவருக்கும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி திருமணமானது. இதனைதொடர்ந்து தாய் பிரேம பிரியாவிடம், பேசுவதை மகள் பவானி தவிர்த்து வந்துள்ளார்.

கொன்னுடுவேன்னு மிரட்டுறாங்க

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 10.30 மணிக்கு மகள் பவனியை பார்ப்பதற்கு பிரேம பிரியா அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மருமகன் தரப்பினரிட, என் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டீர்கள் என்று கூறி சண்டை போட்டுள்ளார்.

மகளை பார்க்க விடமாட்றாங்க..கொன்னுடுவேன்னு மிரட்டுறாங்க!! நடிகை பிரேம பிரியா பரபரப்பு புகார்.. | Premapriya Complaint Against Daughter Husband Rela

ஆத்திரமடைந்த சம்பந்தி ஆனந்தராஜா, அவரது மனைவி வினிதா இருவரும் பிரேம பிரியாவை தாக்கியதாக கூறப்படுகிறது. தகாத வார்த்தைகளால் பேசி மகளை சந்திக்க வரக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார்களாம். இதனால் காயமடைந்த பிரேம பிரியா, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தன்னை தாக்கிய மருமகன் குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தன் பெண்ணிடம் பேசுவதை யாரும் தடுக்கக்கூடாது என்று கேட்டு விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கு சென்று புகாரளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலிசார் இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.