நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் தேவையா! பிரேம்ஜியின் காதலி இவர்தானா?

singer premgi maanaadu vinaita amaran
By Edward Feb 09, 2022 06:21 PM GMT
Report

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடித்து மக்கள் மனதில் நல்ல ஒரு இடத்தை பிடித்து வருபவர் பிரேம்ஜி அமரன். நடிகராக மட்டும் இல்லாமல் இசையமைப்பாளராகவும் ஒருசில படங்களில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் மாநாடு படத்தில் சிம்புவிற்கு நண்பனாக நடித்திருந்தார்.

42 வயதாகும் பிரேம்ஜி இணையத்தில் எந்த நடிகை புகைப்படத்தை பகிர்ந்தாலும் அதை பார்த்து ஜொல்லுவிட்டு மெசேஜ் ரியாக்ஷன் செய்து வருவார். இந்நிலையில், ஆதலால் காதல் செய்வீர், கில்லாடி போன்ற படங்களில் பாடிய பாடகி வினைத்தாவும் பிரேம்ஜியும் காதலில் இருக்கிறார்கள் என்ற செய்தி இணையத்தில் வைரலாகியது.

அதற்கேற்ப வினைத்து அவரது சமுகவலைத்தள பக்கத்தில், உன் கண்களில், நீ என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய் பேபி, நான் என் கைகளுக்கு இடையில் இருட்டில் உன்னுடன் நடனமாடுகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

இதை வைத்து ஊடகங்களில் செய்திகள் பரவியது. இதுகுறித்து நடிகர் பிரேம்ஜி நான் இன்னும் சிங்கிளாகவே இருக்க விரும்புகிறேன். நான் மொரட்டி சிங்கிள் தான் கமிட்டட்னு செய்திகள் வந்தால் நம்பாதீர்கள் என்றும் பிரண்ட்ஸ் கூட போட்டோ போடுறதை வைத்து பேக் செய்தியை போட்றாங்க என்று கூறி விளக்கமளித்துள்ளார்.

Gallery