நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் தேவையா? திரிஷா, பூஜா ஹெக்டேவையும் விடாத பிரபல நடிகர்

trisha premgi tamilactress tamilactor premgiamaran manmataleelai
By Edward Mar 17, 2022 11:26 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வல்லவன் படத்தின் சிம்புவின் நண்பராக நடித்து நடிகராக அறிமுகமாகியவர் பிரேம்ஜி அமரன். இசையமைப்பாளர் கங்கை அமரன் இளைய மகனாக சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் காமெடி ரோல்களில் நடித்து வருகிறார்.

பிரேம்ஜியின் அண்ணன் வெங்கட் பிரபுவின் சென்னை 28 முதல் மற்றும் இரண்டு பாகங்களிலும், மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். நடிப்பில் கலக்கி வந்த பிரேம்ஜி சில படங்களுக்கு இசையமைத்தும் இருக்கிறார்.

தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் மன்மத லீலை படத்திற்கு கூட இவர் தான் இசையமைத்து கொடுக்கிறார். இந்நிலையில் 42 வயதை தொட்டுள்ள பிரேம்ஜி திருமணமாகாமல் சிங்கிளாகவே இருந்து வருகிறார்.

அப்படி இருக்கையில் இணையத்தில் நடிகைகள் போடும் க்ளாமர் புகைப்படங்களை பார்த்து ஜொல்லுவிட்டும் வாயை பிளந்தும் வருகிறார்.

அவர் போடும் ரியாக்ஷனை பார்த்து ரசிகர்கள் நம்ம குடும்பத்திற்கு இது தேவையா என்றும் சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க அண்ணா என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை திரிஷா, ஷ்ருஸ்டி டாங்கே, பூஜா ஹெக்டே போன்ற நடிகைகளின் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்துள்ளார்.