கங்கை அமரன் மகனுக்கு கல்யாணம் ஆகிடுச்சா!! புருஷனை கட்டிப்பிடித்து புகைப்படத்தை வெளியிட்ட பாடகி!!

Premji Amaren
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

80களில் இசையமைப்பாளராக இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தவர் கங்கை அமரன். இளையராஜாவின் சகோதரராக தமிழ் சினிமாவில் பயணித்த கங்கை அமரன் தன்னுடைய இருமகன்களான வெங்கட் பிரபுபை இயக்குனராகவும் பிரேம்ஜியை இசையமைப்பாளர் மற்றும் நடிகராகவும் அறிமுகப்படுத்தினார்.

தற்போது பிரேம்ஜி பல படங்களில் காமெடியானாகவும் நடித்து வருகிறார். 42 வயதை எட்டியுள்ள பிரேம்ஜி, இன்னும் திருமணமாகாமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து நடிகைகள் போடும் புகைப்படங்களுக்கு காதல் ரியாக்ஷனை பதிவிட்டு வந்தார்.

சமீபத்தில் பிரபல பாடகி வினைத்தாவுடன் பிரேம்ஜி காதலில் இருப்பதாகவும் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்து செய்திகள் கசிந்தது.

இந்நிலையில் வினைதா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னுடைய புருஷனுடன் மீண்டும் சேர்ந்துவிட்டேன் என்று கூறி பிரேம்ஜியை கட்டிப்பிடித்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

இதைபார்த்த நெட்டிசன்கள் கல்யாணமாகிடுச்சா அண்ணா என்று கலாய்த்தும் வருகிறார்கள்.

Gallery