பெண்ணுக்கு செஞ்சது கேவலமான காரியம்! 21 வருஷத்துக்கு பின் மறைக்க 120 கோடியா?
இங்கிலாந்து நாட்டின் ராணி 2 ஆம் எலிசபெத் - இளவரசர் பிலிப் தம்பதிகளின் இளைய மகனாக இருக்கும் இளவரசர் ஆண்ட்ரு கடந்த 2001 ஆம் ஆண்டு 21 வயதான வர்ஜீனியா கியூப்ரே என்ற இளம் பெண்ணை சீரழித்ததாக புகார் கூறப்பட்டது.
இந்த குற்றச்சாட்டு சம்பந்தமாக கடந்த 21 வருடங்களாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டு வருகிறது. இந்த குற்றச்சாட்டை இளவரசர் ஆண்ட்ரு மறுப்பு தெரிவித்து வந்தார். மேலும் வழக்கை தள்ளுபடி செய்யுமாறும் கோர்ட்டில் முறையிட்டிருந்தார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை விசாரணையில் சந்தித்து தான் ஆகவேண்டும் என்று நியூயார்க் கோர்ட் திட்டவட்டமாக கூறியது. தற்போது இந்த வழக்கு சம்பந்தமான சில செய்திகள் வெளியாகியுள்ளது.
ராணி 2 ஆம் எலிசதெத் அரியணை ஏறி 70 ஆண்டுகளாகியதை கொண்டாடி வரும் நேரத்தில் இந்த வழக்கு அரச குடும்பத்தினை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதனால் தன் மகனிடம் வழக்கை சுமுகமாக தீர்க்க அரச பெற்றோர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக புகாரளித்த பெண்ணிற்கு சுமார் 16 மில்லியன் டாலர் இழப்பீடாக கொடுக்கவுள்ளாராம் இளவரசர் ஆண்ட்ரூ. வாழ்நாள் செட்டில் மெண்ட் கொடுக்கவுள்ளநிலையில், சட்ட நடைமுறைகளின் படி 30 நாட்களுக்குள் வழக்கை திரும்ப்பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.