பிரின்ஸ் படத்தை பார்த்து செருப்பால் அடித்துக்கொண்ட இளைஞர்.. ப்ளூ சட்டை வெளியிட்ட வீடியோ..
தமிழ் சினிமாவில் தன் உழைப்பால் உயர்ந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா படத்தில் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராகவும் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகராகவும் திகழ்ந்து வருகிறார்.
பிரின்ஸ்
டாக்டர், டான் போன்ற சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் 100 கோடி வசூல் கிளப்பில் சேர்ந்ததை அடுத்து அவரின் மார்க்கெட்டும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தீபாவளி ட்ரீட்டாக இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் பிரின்ஸ். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பல எதிர்பார்ப்புகளுடம் தீபாவளி முன்னிட்டு 21ஆம் தேதி வெளியானது. சர்தார் படத்தினுடம் போட்டிப்போட்டு ரிலீஸான பிரின்ஸ் போதுமான வரவேற்பை பெறாமல் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
ப்ளூ சட்டை மாறன்
50 கோடியை வெளியான 5 நாளில் எடுத்தாலும் நல்ல விமர்சனத்தை பெற தவறியது பிரின்ஸ் படம். இதனால் படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த இளைஞர்கள் பிரின்ஸ் படத்தால் செருப்பை கழட்டி அடித்துக்கொள்ளும் அளவிற்கு புலம்பி சென்றுள்ளனர். ஒரு இளைஞர் பிரின்ஸ் படத்தை பார்த்துவிட்டு செருப்பால் அடித்துக்கொண்ட வீடியோவை யூடியூப் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கலாய்த்தபடி வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.
Prince - Public review. pic.twitter.com/QlQMJGKU4K
— Blue Sattai Maran (@tamiltalkies) October 26, 2022