அந்த நடிகர் தான் வேண்டும்! இரண்டாவது முறையாக ஜோடி போடும் பிரியா ஆனந்த்
தமிழ் மட்டுமல்லாது மற்ற சினிமா துறையிலும் நடிகைகளுக்கு ஒரு இடம் கிடைக்காமல் இருந்தால் அவர்களை ஒதுக்கி வைக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். அந்தவகையில் கடந்த பல ஆண்டுகளாக இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு படம் ஹிட்டாகினாலும் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடிக்க அவஷ்தை படும் நடிகையாக இருப்பவர் நடிகை பிரியா ஆனந்த்.
சமீபத்தில், நடிகர் விக்ரம் மகனுடன் நடித்து கிசுகிசுக்களில் சிக்கினார். தற்போது 34 ஆகிவிட்டதால் இனிமேலும் முன்னணி நடிகையாக வலம் வருவது கொஞ்சம் கஷ்டமான விஷயம் என்பதால் கிடைக்கும் பட வாய்ப்புகளில் எல்லாம் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு காமெடி நடிகர் ஆர் ஜே பாலாஜி ஹீரோவாக நடித்த எல்கேஜி படத்தில் நாயகியாக நடித்திருந்தார் ப்ரியா ஆனந்த்.
அந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மீண்டும் ஆர்ஜே பாலாஜி இயக்கி நடிக்கும் புதிய படமொன்றில் ப்ரியா ஆனந்த் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மேலும் பிரியா ஆனந்த் ஆர் ஜே பாலாஜி படம் என்றால் எனக்கு டபுள் ஓகே தான் என பச்சை கொடி காட்டி விட்டாராம்.
ஹிந்தியில் 2018 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த பதாய் ஹோ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கை ஆர் ஜே பாலாஜி இயக்கி நடிக்க உள்ளாராம். மேலும் இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தை மூக்குத்தி அம்மன் படத்தில் ஆர் ஜே பாலாஜி உடன் இணை இயக்குனராக இருந்த சரவணன் என்பவர் மீண்டும் ஆர் ஜே பாலாஜி உடன் இணைந்து இந்த படத்தை உருவாக்க உள்ளார்களாம்.