தனுஷை தப்பா நினைச்சுட்டேன்..எனக்கும் வந்த பிரச்சனை!! பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்...
Dhanush
Priya Bhavani Shankar
Gossip Today
Thiruchitrambalam
By Jai
பிரியா பவானி சங்கர்
செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சின்னத்திரை நடிகையாக திகழ்ந்து தற்போது தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர்.

தற்போது ரவி தேஜா நடிப்பில் வெளியான இருமுடி படத்தில் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். படத்தின் பிரமோஷனுக்காக அளித்த பேட்டியொன்றில் தனுஷுடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
அப்போது, நான் தொலைக்காட்சியில் பணியாற்றியபோது ஒருமுறை தனுஷ் சாரை பேட்டி எடுத்தேன். அவர் ரொம்பவே ரூடாக நடந்து கொண்டார். அப்போது, என்ன இவ்ளோ பெரிய ஸ்டார் இப்படி ரூடா இருக்காரேன்னு நினைத்தேன்.

ஆனால் நடிகையாக மாறியப்பின், பேட்டிகளிலும், பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் எனக்கு ஏற்படும் மனநிலையை பார்த்து அச்சச்சோ தனுஷ் சாரை தப்பா நினைத்துவிட்டோமே என்று நினைத்ததாக பிரியா பவானி சங்கர் தெரிவித்திருக்கிறார்.