காதலரை திருமணம் செய்த பிரியா பவானி சங்கர்!! சம்பளம், சொத்து மதிப்பு விவரம்..
செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை பக்கம் வந்து டாப் நடிகையாக மாறிய பிரியா பவானி சங்கரின் சொத்து மதிப்பு விவரம்..

பிரியா பவானி சங்கர்
தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக பயனித்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர், ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். அதன்பின் சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக வெள்ளித்திரையில் அறிமுகமாகினார். அதன்பின் அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் தெலுங்கு படங்களிலும் காலெடி எடுத்து வைத்தார்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய நீண்டநாள் காதல் ராஜ்வேல் ராஜா என்பவருடன் லிவ்விங் வாழ்க்கையில் இருந்து கொண்டும் நடித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் வெளியான ரவி தேஜா நடித்த இருமுடி படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
திருமணம், சொத்து மதிப்பு
தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர், இன்று நவம்பர் 11 ஆம் தேதி காலை தன்னுடைய காதலர் ராஜ்வேல் ராஜாவை திருமணம் செய்து கொண்டார். சிம்பிளாக நடந்த திருமண வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு டிரெண்ட்டாகி வருகிறது.

இந்நிலையில் பிரியா பவானி சங்கரின் சம்பளம், சொத்து விவரங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆரம்பத்தில் லட்சத்தில் சம்பளம் வாங்கி வந்த பிரியா பவானி சங்கர், கடைசியாக நடித்து வெளியான இருமுடி படத்திற்காக சுமார் ரூ. 1.5 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.
அப்படி சம்பாதித்த அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 15 முதல் ரூ. 20 கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.