லட்சத்தில் சம்பளம் வாங்கி கோடியில் ECR பங்களா!! வாய்ப்பில்லாமல் ஓரங்கட்டப்படும் நடிகை பிரியா பவானி சங்கர்..

Priya Bhavani Shankar Indian Actress
By Edward Nov 27, 2022 08:55 AM GMT
Report
175 Shares

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராகவும் சீரியல் நடிகையாக இருந்து பின் வெள்ளித்திரை நடிகையானவர் நடிகை பிரியா பவானி சங்கர். மேயாதமான் படத்தின் மூலம் கதாநாயகியாக கால் பதித்திருர்ந்தாலும் அதன்பின் அவருக்கான ஸ்கோப் கொடுக்கும் கதாபாத்திரம் அமையவில்லை.

25 படங்களில் நடித்துள்ள அவர் அவரது 26 வது படமாக தெலுங்கில் ஈஸ்வரன் கார்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே தமிழில் இரண்டாம் நடிகை ரோல்கள் அமைவதால் அப்செட்டில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரோலில் நடிக்க முடிவெடித்திருந்தார்.

ஆனால் தெலுங்கில் அறிமுகமாகவுள்ள நிலையில் அந்த படத்திலும் இரு கதாநாயகிகள் இருக்கிறார்களாம். இங்க இருந்து அங்கே போனாலும் மறுபடியும் அதேதானா என்று பிரியா பவானி சங்கர் அப்செட்டில் இருந்து வருகிறாராம்.

கையில் பத்து தல, இந்தியன் 2, ருத்ரன், அகிலன் போன்ற படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் பல நாட்கள் கழித்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தற்போது பாத்டப்பில் படுத்தபடி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். போட்டோஷூட் எடுக்க வேற இடமில்லையா என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

வாய்ப்பில்லாமல் இரண்டாம் நடிகையாகவே நடிக்க கமிட்டாகி ஈசிஆர்-ல் கோடியில் பங்களாவும் கட்டியிருக்கிறார் பிரியா பவானி சங்கர். அது எப்படி என்றும் ரசிகர்கள் வாய்ப்பிளந்து வருகிறார்கள்.