என்னை கொடுமைப்படுத்துறாங்க!! ஜிம் ஒர்க்கவுட் வீடியோவை வெளியிட்டு நடிகை பிரியா பவானி சங்கர்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமாகி டாப் இடத்தினை பிடித்தவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி சீரியல் நடிகையாக கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.
அதன்பின் மேயாத மான் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த பிரியா பவானி சங்கர், கையில் வரிசையாக அடுத்தடுத்த படங்களில் வைத்து நடித்து வருகிறார். இதற்கிடையில் தன் காதலர் ராஜ்வேலுடன் வெளிநாட்டுக்கு பறந்து இரு மாதங்கள் ஜாலியாக இருந்து வந்தார்.
சமீபத்தில் ECR பகுதியில் பெரிய பங்களாவை வாங்கி காதலருடன் குடியேறினார். மேலும் ECR பகுதிக்கு பக்கத்தில் ஒரு ரெஸ்டாரெண்ட் ஆரம்பித்து அதையும் பார்த்து வருகிறார். பிரியா பவானி சங்கர் தன் காதலர் ராஜ்வேலுடன் பிரேக்கப் செய்துள்ளதாக செய்திகள் கசிந்தது
இந்நிலையில், பிரியா பவானி சங்கர் தனிமையில் இருக்க ஆசைப்பட்டு இமாச்சல் பிரதேஷ்-க்கு சென்றுள்ளார். அங்குள்ள இமயமலை உச்சியில் டெண்ட் போட்டு மெடிடேஷன் செய்தும் புத்தகம் படித்து சாப்பிட்டும் நாட்களை போக்கி வருகிறார்.
இதனால் ரசிகர்கள் உண்மையில் பிரேக்கப் தானா என்று கேள்வி கேட்டு வந்தனர். இந்நிலையில் பிரியா பவானி சங்கர் ஜிம் ஒர்க்கட்டில் தன்னை கொடுமைப்படுத்துகிறார்கள் என்று கூறி ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.