காசு வந்தா காக்கா கூட கலர் ஆகிடும்!! வீடியோ வெளியிட்டு வாயடைக்க வைத்த நடிகை பிரியா பவானி சங்கர்..
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். சீரியலில் மக்களின் ஆதரவோடு நல்ல வரவேற்பு பெற்ற பிரியா பவானி சங்கர், மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
அதன்பின் அடுத்தடுத்த படங்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஈ சி ஆர் பங்களா புது ரெஸ்ட்டாரெண்ட் என்று சைட் பிசினஸும் செய்து வருகிறார். தற்போது பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர், ருத்ரன் படம் ரிலீஸ் ஆன பின் ஒரு நீண்ட பதிவினை வீடியோவோடு சேர்த்து பகிர்ந்துள்ளார். அதில், கல்லூரி படிக்கும் போது செலவு செய்ய காசில்லாததால் கருப்பாக இருந்ந்தேன் என்று கெளதம் வாசுதேவ் மேனனை பேட்டி எடுக்கும் வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.
மேலும் காசு இருந்தா காக்கா கூட வெள்ளையாகிடும்ன்னு சொல்லுவாங்க. ஆனா காசு தானா தேடி வீட்டுக்கு வராது நீங்க தான் போராடி இந்த உலகத்தில் தேவையானத பெற முடியும் என்று பதிவிட்டுள்ளார்.
தன் காதலரான ராஜ் வேலுக்கு நன்றி கூறி ஐ லவ் யூ என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் தன் காதலருடன் பிரேக் அப் என்ற வதந்திக்கும் முற்றுப்புள்ளியும் வைத்திருக்கிறார் பிரியா பவானி சங்கர்.