வெளிநாட்டு அவுட்டிங்கே கதியாக இருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர்!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்..
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின், சின்னத்திரை சீரியல் நடிகையாக நடிக்க ஆரம்பித்து கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் கொடுத்த நல்ல வரவேற்பால் வெள்ளித்திரையில் அறிமுகமாகியவர் நடிகை பிரியா பவானி சங்கர். கடைக்குட்டி சிங்கம் படத்திலும் முக்கிய ரோலில் நடித்த பிரியா பவானி, மேயாத மான் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.
இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வளர்ந்து வரும் டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார். தற்போது இந்தியன் 2, டிமாண்டி காலணி 2 உள்ளிட்ட தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார். மேலும் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் முக்கிய ரோலில் நடித்து, தன்னுடைய ஷூட்டிங்கை முடித்திருந்தார் பிரியா பவானி சங்கர்.
இதற்கிடையில், தன் நீண்ட நாள் காதலரான ராஜ் வேலுடன் இணைந்து வெளிநாட்டு அவுட்டிங்கிற்கும் சென்று வருகிறார். சில வருடங்களுக்கு முன் தன் காதலருடன் ECR பகுதியில் ஒரு பங்களாவை வாங்கி குடியேறினார். பின் liams_diner ஓட்டல் ரெஸ்ட்டாரெண்ட் ஆரம்பித்தார்.
சமீபகாலமாக வெளிநாட்டுக்கு அவுட்டிங் சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் பிரியா பவானி சங்கர். தற்போது கூட ஆஸ்திரேலியாவின் சிட்னி சிட்டி-க்கு சென்று கருப்பு நிற ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் விடாமுயற்சி படத்தில் தான் இன்னும் இருக்கிறீர்களா? அங்கு ஷூட்டிங் போகிறதா என்றும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
நடிகர் விஷாலின் ரத்னம் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தும், அப்படத்தின் பிரமோஷனில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார் நடிகை பிரியா பவானி சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.



