ECR பங்களாவில் போட்டோஷூட்!! நடிகை பிரியா பவானி சங்கரின் வைரல் புகைப்படம்
சின்னத்திரை செய்தி வாசிப்பாளராக பணியாற்றி கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை பிரியா பவானி சங்கர்.
இதன்பின் மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளித்திரை படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமாகினார். அப்படத்திற்கு பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.
சமீபத்தில் செகண்ட் ரோலில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர், நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் சிம்புவின் பத்து தல படத்தில் கெளதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.
கடந்த ஆண்டு தன்னுடைய சிறுவயதில், தனியொரு வீடு வாங்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற ECR பகுதியில் இரு வீடு வாங்கி காதலருடன் குடியேறினார்.
அங்கு எடுத்த புகைப்படங்களை பகிராமல் வந்த பிரியா பவானி சங்கர், பத்து தல படத்திற்கு பின், அங்கு எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.