பெண்ணாக மாறிய நடிகரை கலாய்த்த நடிகை பிரியா பவானி சங்கர்! அதுவும் அந்த போட்டோவையா போடுறது!.

instagram sathish priya bhavani shankar
By Edward Apr 13, 2021 09:58 AM GMT
Report

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் நல்ல வரவேற்பை பெற்றதால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் ஆரம்பித்து தற்போது முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார். ரசிகர்களுடன் இணையத்தில் எப்பவும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி போட்டோஹுட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் தங்க சேலையில் அணிந்து கொண்டு நான் என்ன யோசிக்கிறேன் என்று புகைப்படத்தை வெளியிட்டார்.

அதற்கு காமெடி நடிகர் சதீஷ், என்னுடன் ஹீரோயினாக நடிக்க முடியாமல் போச்சே என்று கலாய்த்து பதில் அளித்தார். இப்படி செல்ல பிரியா பவானி சங்கர் சதிஷ் பெண் வேடமிட்டு இருக்கும் புகைப்படத்தோடு அப்டி சொல்லாதீங்க கோபால் என்று பதிலுக்கு கேலி செய்துள்ளார். இதற்கு ரசிகர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.