பல ஆண்டுகள் காதலித்தும் இன்னுமா கல்யாணம் பண்ணல! பிரியா பவானியால் காத்துக்கிடக்கும் காதலர்..
சின்னத்திரையில் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் மக்கள் மனதை ஈர்த்து வந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர்.
இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்க அதன்பலனாக சினிமா வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. அப்படியே சீரியலுக்கு பூட்டுப்போட்டுவிட்டு வைபவ் நடிப்பில் வெளியான மேயாத மான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து கதாநாயகி அவதாரம் எடுத்தார்.
அதன்பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து பிரபலமானார். இதனை அடுத்து மான்ஸ்டர் படத்தில் எஸ்ஜே சூர்யாவுக்கு ஜோடியாகவும் ஓ மணப்பெண்ணே படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். 3 வருடங்களுக்கு முன் குருதி ஆட்டம், பொம்மை, ஹாஸ்டல், ருத்ரன் போன்ற படங்களில் நடித்தும் இருந்தார்.
சமீபத்தில் தான் பொம்மை படத்தில் டிரைலர் வெளியாகி மக்கள் மனதை ஈர்த்து வருகிறது. இந்நிலையில் பல நடிகர்களுடன் காதல் கிசுகிசுக்கப்பட்ட பிரியா பவானி சங்கர் உண்மையில் பல ஆண்டுகளுக்கும் மேல் ஆண் நண்பர் ஒருவரை காதலித்து வருவதாக அவரே புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
சமீபத்தில் காதலர் குறித்து திருமணம் குறித்தும் ஓப்பனாக பதிலளித்துள்ளார். நான் மீடியாவை ரொம்ப மிஸ் செய்கிறேன். ஆயிரம் இருந்தாலும் இது நடிப்பு. ஒருவரின் ஐடியாவை வைத்து தான் சீனா எழுதி அதை நடிக்கிறோம்.
ஆனால் மீடியா அப்படி கிடையாது ரிப்போர்ட்டிங் செய்யும் போது நல்லா பண்ணலை என்றால் சீனியர் எடிட்டர் கிட்ட திட்டு வாங்கி இருப்போம். அதனால் தான் நியூஸ் சேனல் எனக்கு பலவற்றை கற்று கொடுத்து உதவியது. ர
ஜினி, விஜய், அஜித்துடன் நடிக்க ஆசை. ஒரு வேலை நான் மீடியாவிற்கு வரவில்லை என்றால் காலேஜ் படிக்கும் போதே கல்யாணம் பண்ணிக்க சொல்லி என் பாய் பிரண்டு கிட்ட சொன்னேன். அப்படி கல்யாணம் செய்து செட்டிலாகி இருப்பேன். பொருளாதாராத்திற்காக ஒரு வேலை பார்த்திருப்பேன் என்று கூறியுள்ளார்.
