100 முறை ஐ லவ் யூ சொன்ன ப்ரியா பவானி சங்கர்? கொண்டாட்டத்தில் பிரபல நடிகர்..
தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பல பிரபலங்கள் அறிமுகமாவது வழக்கம். அந்தவகையில் குறுகிய கால கட்டத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இதையடுத்து கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திப் படங்களில் கமிட்டாகி நடித்து புகழ் பெற்று வருகிறார்.
இதற்கிடையில் பல கிசுகிசுக்களிலும் சிக்கியும் அதை கண்டுகொள்ளாமல் புகைப்படங்களால் பதிலடி கொடுத்தும் வருகிறார். ஏற்கனவே ராஜவேல் என்பவரை காதலித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவரே அதிகாரபூர்வமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்தார்.
எஸ் ஜே சூர்யா மற்றும் பிக் பாஸ் கவின் ஆகியோருடன் ஏற்பட்ட கிசுகிசு காரணமாக ஓபன் ஆகவே தெரிவித்தார் பிரியா பவானி சங்கர். இந்நிலையில் பிரியா பவானி சங்கர் தன்னுடைய பக்கத்தில் பிரபல நடிகர் மாதவனுக்கு நூறு முறை ஐ லவ் யூ சொல்லி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் அமேசான் தளத்தில் வெளியான மாதவனின் மாறாக படத்தை புகழ்ந்து பேசியுள்ளார். மேலும் சிறு வயதிலிருந்தே பிரியா பவானி சங்கர் மாதவனின் பெரிய ரசிகை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மாறா பட புரமோஷனுக்காக பிரியா பவானி சங்கர் இப்படி செய்துள்ளது ரசிகர்களை அதிருப்தி ஆக்கியுள்ளது.
It’s it’s you who makes all the risks heart burns and anxiety so so worth it my lady. God bless you and thank you so much for all the live . ?❤️??????? https://t.co/ItpjvCevqD
— Ranganathan Madhavan (@ActorMadhavan) January 8, 2021