5 நிமிஷ ஆட்டம் போட்ட சாயிஷாவுக்கு 40 லட்சம்!! பத்து தல படத்தில் நடிகை பிரியா பவானி சங்கரின் சம்பளம் இவ்வளவு தானா...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிம்பு பல ஆண்டுகள் கழித்து மாநாடு வெந்துதணிந்தது காடு படத்திற்கு பின் பத்து தல படத்தில் நடித்து வருகிறார். கிருஷ்ணா இயக்கத்தில் நடித்துள்ள இப்படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது.
வரும் 30 ஆம் தேதி வெளியாகவுள்ள இபப்டத்தின் ஐட்டம் பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ராவடி பாடலுக்கு ஆர்யாவின் மனைவியும் நடிகையுமான சாயிஷா குத்தாட்டம் போட்டுள்ளார்.
இப்பாடலில் ஆட்டம் போட ஆர்யா தான் காரணம் என்று சாயிஷா கூறியிருந்தார். அப்பாடலுக்கு நடிகை சாயிஷாவுக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுத்துள்ளார்களாம். 5 நிமிட பாடலுக்கு இப்படியொரு தொகையை பெற்றுள்ளது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
மேலும் பத்து தல படத்தில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் முக்கிய ரோலில் நடித்துள்ளார். அவருக்கு சம்பளமாக 70 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
5 நிமிடம் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்ட சாயிஷாவுக்கே 70 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்ட நிலையில் பிரியா பவானி சங்கர் அதை விட 30 லட்சம் தான் கூடுதலாக பெற்றிருக்கிறார். இப்படி லட்சத்தில் சம்பளம் வாங்குவதால் தான் பிரியா பவானி சங்கர், ரெஸ்ட்டாரெண்ட் மற்றும் விளம்பரங்கள் மூலம் சம்பாதித்து வருகிறாராம்.
You May Like This Video