இந்த வயசிலும் என்னமா ஆடுறாரு.. ப்ரியாமணியின் வீடியோ வைரல்

priyamani tamilactress
By Edward Dec 03, 2021 02:30 PM GMT
Report

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பருத்தி வீரன் படம் மூலமாக பாப்புலர் ஆனவர் நடிகை ப்ரியாமணி. அவர் அதற்கு பிறகு அவர் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு வாய்ப்புகள் குறைந்ததால் இண்டஸ்ட்ரியில் இருந்து கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டார் என்று கூட சொல்லலாம்.

திருமணத்திற்கு பிறகு அவர் முழுமையாக டிவி நிகழ்ச்சிகளில் மட்டுமே கவனம் செலுத்திவருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி தொலைக்காட்சிகளில் அவர் ரியாலிட்டி ஷோ ஜட்ஜாக பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் ப்ரியாமணி சமீபத்தில் இடிவி ஷோ ஒன்றின் பைனலுக்காக சூப்பரான உடையில் தயாராகி இருக்கும்போது அசிஸ்டன்ட் உடன் சேர்ந்து அவர் நடனம் ஆடி இருக்கிறார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி இருக்கிறது.

அதை பார்த்து சமந்தா உட்பட பிரபலங்கள் பலரும் அவரை பாராட்டி இருக்கின்றனர். இந்த வயசிலும் இப்படி ஆடுறாரே என நெட்டிசன்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.