அந்தமாதிரி காட்சியா வேண்டவே வேண்டாம்!! நடிகை பிரியாமணி சொன்ன உண்மை காரணம்..
தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிரபலமானவர் நடிகை பிரியாமணி. சமீபகாலமாக தமிழில் அதிக வாய்ப்புகள் இல்லை என்று இந்தி, தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார் பிரியாமணி.
2017ல் முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிரியாமணி சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவரக கலந்து கொண்டும் வருகிறார்.
சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் பிரியாமணி.
சமீபத்திய பேட்டியொன்றில், தான் படுக்கையறை மற்றும் நெருக்கமான காட்சிகளிலோ நடிக்க மாட்டேன். அதற்கு முழு காரணம் என் குடும்பத்தினர் படத்தை பார்ப்பார்கள். படம் பார்க்கும் போது அவர்களின் முகம் சுளிக்கக்கூடாது என்பதற்காகவும் அப்படி நடித்தால் என் கணவருக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும் என்பது தான் என்று வெளிப்படையாக பிரியாமணி தெரிவித்துள்ளார்.