32 வயதை எட்டிய பிரியங்கா மோகன்!! சொத்து மதிப்பு விவரம் இதோ..

Priyanka Arul Mohan Birthday Tamil Actress Actress Net worth
By Jai Nov 20, 2026 10:11 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை பிரியங்கா மோகன், தற்போது தன்னுடைய 32வது பிறந்தநாளை கொண்டி வரும் நிலையில் அவரது சொத்து மதிப்பு எவ்வளவு என்ற விவரம் வெளியாகியிருக்கிறது. ஒரு படத்திற்கு சுமார் ரூ. 2 கோடி வரை சம்பளமாக பெறும் பிரியங்காவின் சொத்து மதிப்பு ரூ. 10 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளதாம்.

பிரியங்கா மோகன்

கன்னட சினிமாவில் அறிமுகமாகி தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை பிரியங்கா மோகன். இப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸ் பெற்று பிரியங்காவுக்கு நல்ல கெரியரை தேடி கொடுத்தது. இதனை அடுத்த சிவகார்த்திகேயனுடன் மீண்டும் டான் படத்தில் இணைந்து நடித்தார். இப்படமும் சூப்பர் ஹிட்டாகி ரூ. 100 கோடி வசூலை அள்ளியது.

பின் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், தனுஷின் கேப்டன் மில்லர், ரவி மோகனின் பிரதர் போன்ற ஃபிளாப் படங்களில் நடித்தார். சமீபத்தில் தெலுங்கில் பவண் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து வெளியான OG படத்தில் நடித்தார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மஞ்சணத்தி படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

சொத்து மதிப்பு

இன்று நவம்பர் 20 ஆம் தேதி பிரியங்கா மோகன் தன்னுடைய 32வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அதனையொட்டி அவரின் சம்பளம், சொத்து மதிப்பு விவரம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. ஒரு படத்திற்கு ரூ. 2 கோடி வரை சம்பளமாக பெற்று வரும் பிரியங்கா, விளம்பரங்களில் நடித்து வருமானம் ஈட்டி வருகிறார்.

அப்படி தொழில் முதலீடுகள் மூலம் சம்பாதித்த பிரியங்காவின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடி க்யூ3 காரும், 28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இன்னோவா காரும் பிரியங்கா மோகன் வைத்திருக்கிறார்.