என்ன சிம்ரன் இதெல்லாம்! செருப்புக்கே இத்தன கோடியில் ரூம்போட்டு யோசிக்கும் நடிகை..

actress bollywood priyankachopra
By Edward Nov 15, 2021 07:23 AM GMT
Report

கடந்த 2000-ம் ஆண்டில் உலக அழகி போட்டியை வென்று அதன் பின்னர் தமிழில் நடிகர் விஜய்யுடன் தமிழன் என்னும் படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அடியெடுத்து வைத்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா.

அதை தொடர்ந்து ஹிந்தியில் தொடர்ச்சியாக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்து பின் ஹாலிவுட்டிலும் அசத்தினார். பாப் பாடகரான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார் பிரியங்கா.

இந்நிலையில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் இவர் எந்த நாடுகளுக்கு சென்றாலும் ஷூ கடைகளை தேடி தேடி சென்று ஷாப்பிங் செய்வாராம்.

மேலும், இதுவரை சுமார் 100 ஜோடிக்கு மேல் ஷூ வித விதமான காலணிகளை வாங்கி வைத்திருப்பதாகவும் இதற்கென்றே தனி அரை ஒன்றை வைத்திருப்பதாகவும் கூறி எல்லோரையும் ஆச்சரிய படுத்தியுள்ளார்.