1600 மணி நேரம் செய்யப்பட்ட நெக்லஸ்!! பிரியங்கா சோப்ரா நெக்லஸின் விலை இவ்வளவா?
பிரியங்கா சோப்ரா
உலக அழகியாக பட்டம் பெற்று அப்படியே பாலிவுட் பக்கம் வந்து ராஜ்ஜியம் செய்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தமிழில் இவர் விஜய்யுடன் தமிழன் என்ற ஒரே படத்தில் நடித்திருக்கிறார்.
பாலிவுட்டில் அதிக படங்கள் நடித்தாலும், நிறைய ஹிட் படங்கள் கொடுத்தாலும் பிரியங்கா சோப்ரா மெல்ல மெல்ல ஓரம்கட்டப்பட்டார்.
ஆனால் அவர் தனது திறமையை நிரூபிக்க நிறைய இடங்கள் இருப்பதை புரிந்துகொண்டு அப்படியே ஹாலிவுட் பக்கம் சென்றவர் தொடர்ந்து அங்கு படங்கள் நடித்து வருகிறார்.
படங்கள், விளம்பரங்கள், சமூக வலைதள பதிவுகள், சொந்த தொழில் என பல வகையில் சம்பாதித்து வருகிறார். பிரியங்கா சோப்ராவின் சகோதரர் சித்தார்த் மற்றும் நீலம் உபாத்யாயாவின் திருமணம் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.
அதில், பிரியங்கா சோப்ரா தன் சகோதரர் மற்றும் குடும்பத்தினருடன் வலம் வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை நாம் அறிவோம்.
இவ்வளவா?
இந்நிலையில், பிரியங்கா சோப்ரா தனது சகோதரர் திருமணத்தில் அணிந்திருந்த நெக்லஸ் தான் தற்போது பேசும் பொருளாக மாறியிருக்கிறது.
ஏன்னென்றால் அந்த நெக்லஸ் கிட்டத்தட்ட 1600 மணி நேரத்தில் அதாவது 67 நாட்கள் செய்யப்பட்ட வைர-மரகத நெக்லஸ். அதன் விலை ரூ.12 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.