நடிகர் விஜய் இப்படிப்பட்ட ஒருவரா... நடிகை தமன்னா ஓபன் டாக்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார். அரசியல் ஒரு பக்கம் இருக்க, விஜய் நடித்த ஜனநாயகன் படமும் பிரச்சனையில் சிக்கி, இதுவரை ரிலீஸ் எப்போது என்றே தெரியாமல் உள்ளது. தேர்தலுக்கு பின்தான் இப்படம் வெளிவரும் என உறுதியாக பலரும் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய்யுடன் சுறா திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை தமன்னா. இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் தற்போது நடிப்பை தாண்டி, சிறப்புப் பாடல்களில் நடனமாடுவதில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக ரூ. 5 முதல் ரூ. 6 கோடி வரை சம்பளமும் பெறுகிறாராம்.

இந்நிலையில், நடிகர் விஜய் எப்படிப்பட்டவர் என்பது குறித்து நடிகை தமன்னா ஒரு விழா ஒன்றில் ஓப்பனாக பேசி இருக்கிறார். "விஜய் ஒரு சிம்பிளான மனிதர். மென்மையாக பேசுபவர். ஆனால் நடனம் ஆடுவதில் அவர் ஒரு ஜீனியஸ்" என தமன்னா கூறியுள்ளார்.

தமன்னா நடிப்பில் அடுத்ததாக தமிழில் உருவாகி வரும் படம் புருஷன். இப்படத்தை சுந்தர் சி இயக்க விஷால் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
