21 கோடியில் வைர காதணிகள்..படமே இல்லாமல் ராணிப்போல் வாழும் பிரபல நடிகை..
பிரியங்கா சோப்ரா
சினிமாத்துறையில் நடிக்கும் நடிகைகள் பலர் ஒரு கட்டத்தில் சொத்துக்களை சேர்த்து ஆடம்பர வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிடுவார்கள். அப்படி ஒரு நடிகை கோலிவுட்டில் அறிமுகமாகி பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்து டாப் நடிகையாக திகழ்ந்து பல கோடி சொத்துக்கு ராணியாக மாறியிருக்கிறார்.
அவர் வேறு யாருமில்லை, விஜய்யின் தமிழன் படத்தில் நடித்து அறிமுகமான நடிகை பிரியங்கா சோப்ரா தான்.
சொத்து மதிப்பு
டாப் நடிகையாக திகழ்ந்து வரும் பிரியங்கா சோப்ரா, கிட்டத்தட்ட 30 கோடி அளவில் சம்பளமாக பெற்றும் பல விளம்பரங்களுக்கு கோடிக்கணக்கில் சம்பாதித்து சொத்துக்களை சேர்த்து வருகிறார். பாப் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்த பிரியங்கா சோப்ரா, ஒரு மகளையும் பெற்ற்டுத்தார்.
தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். 2016ல் நடந்த ஆஸ்கர் விருதுவிழாவில் 50 காரட் ரூ.21.75 கோடி மதிப்புள்ள வைர காதணிகளை அணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
சமீபத்தில் அவரது சகோதரர் திருமணத்தில் கூட 8 கோடி ரூபாய் மதிப்பிலான விலையுயர்ந்த நெக்லஸ் அணிந்து வியக்க வைத்தார். தற்போது பிரியங்கா சோப்ராவின் சொத்து மதிப்பு ரூ. 650 கோடி என்று கூறப்படுகிறது.