ப்ரியங்காவுக்கு எதுக்கு 2 பட்டம்.. விஜய் டிவி அவார்ட்ஸ் ஷோவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

Vijay Television Awards Priyanka Deshpande
By Parthiban.A Apr 04, 2022 10:30 PM GMT
Report

பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டுவிட்டு தற்போது தான் வெளியில் வந்திருக்கிறார் பரியங்கா. அந்த ஷோ மூலமாக அவருக்கு அவப்பெயர் தான் அதிகம் கிடைத்தது. அதிலும் குறிப்பாக பிக் பாஸ் ஷோவில் அவர் நடந்துகொண்ட விதத்தால் நெட்டிசன்கள் அவரை மிக மோசமாக வறுத்தெடுத்தனர்.

தற்போது அவர் விஜய் டிவி தொகுப்பாளராக மீண்டும் திரும்பி இருக்கும் நிலையில் அதே ட்ரோல்கள் ஒரு பக்கம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் தற்போது ப்ரியங்கா சமீபத்தில் நடந்த விஜய் டிவி அவார்ட்ஸ் 2022ல் இரண்டு விருதுகளை பெற்று இருக்கிறார். பேவரைட் தொகுப்பாளர் மற்றும் சிறந்த தொகுப்பாளர் ஜோடி (பிரியங்கா + மாகபா) ஆகிய இரண்டு விருதுகளை பெற்று இருக்கிறார்.

100 நாள் பிக் பாஸில் இருந்து திரும்பிய அவருக்கு எப்படி இதை எல்லாம் கொடுக்கலாம் என நெட்டிசன்கள் விஜய் டிவியை கலாய்த்து வருகின்றனர். 


Gallery