நீங்களும் ஆரம்பிச்சாச்சா? ஆங்கர் தொழிலைவிட்டுட்டு போட்டோஷூட் பக்கம் சென்ற பிரியங்கா!

supersinger priyanka
By Edward Apr 01, 2022 04:05 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளர் பணியினை ஆரம்பித்தவர் பிரியங்கா. மாகாபா ஆனந்துடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த பிரியங்கா மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

உடலை பற்றி மற்றவர்கள் கிண்டல் செய்தாலும் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு சிர்ப்போடு காணப்படுவார். சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூசிக், சிறப்பு நிகழ்ச்சிகள் என பிரியங்காவின் நிகழ்ச்சிகள் அனைத்து ஹிட் தான்.

அப்படி இந்த ஆண்டு ஆரம்பித்த சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது அவர் பிக்பாஸ் 5 சீசனுக்கு சென்றதால் மாகாபா ஆனந்துடன் தொகுத்து வழங்காமல் இருந்தார்.

இதற்கிடையில் மாகாபா-வுடன் மைனா நந்தினி தொகுத்து வழங்கி வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து சூப்பர் நிகழ்ச்சியை ஒரு வாரம் மட்டுமே பிரியங்கா மாகாபா தொகுத்து வழங்கினார்.

அதன்பின் ஹைதராபாத் டூர் என பிஸியாக இருந்தார். தற்போது மாகாபா ஆனந்துடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிலையில் போட்டோஷூட் பக்கம் திரும்பியுள்ள பிரியங்கா ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் போட்டோஷூட் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஆங்கர் தொழிலை விட்டு இப்போ இத ஆரம்பிச்சிட்டீங்களா என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.