கீர்த்தி, பூஜா ஹெக்டேவை ஓரங்கட்டிய பிரபல நடிகர்! 27 வயது நடிகைக்கு பிளான்..
தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் மகேஷ் பாபு. சமீபத்தில் அவர் நடிப்பில் சர்கார் வாரி பாட்டா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வசூலில் சாதனை படைத்துள்ளது.
இப்படத்திற்கு பிறகு மகேஷ் பாபு திரிவிக்ரம் என்ற இயக்குனருடன் 28வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக முதலில் நடிகை பூஜா ஹெக்டே தான் பரிந்துரை செய்யப்பட்டது.
ஆனால் இதை மாற்றி டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று வரும் நடிகை பிரியங்கா மோகனை நடிக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.
ஆச்சாரியா, பீஸ்ட் படத்தின் தோல்வியால் பூஜா ஹெக்டேவின் மார்க்கெட் சற்று குறைந்ததால் பிரியங்கா மோகனை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
#Trivikram in plans to replace #PoojaHegde with #PriyankaArulMohan in #SSMB28 pic.twitter.com/QeRxh8iKhp
— Movie Buzz (@TFIMovieBuzz) June 2, 2022