ஐஸ்வர்யா ராயோடு சேர்த்து ரஜினி போட்ட வலையில் சிக்கிய இளம் நடிகை! குஷியில் நெல்சன்..

nelson anirudh superstar aishwaryarai thalaivar169 priyankamohan rtajinikanth
By Edward Mar 16, 2022 04:53 AM GMT
Report

இயக்குனர் சிறுத்தை சிவாவின் அண்ணாத்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் யார் படத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்து பலர் மத்தியில் கேள்வியாகவே இருந்து வந்தது. அதற்கேற்ப பல இயக்குனர்கள் சூப்பர் ஸ்டாரிடம் கதையை கூறியும் வந்தனர்.

யாரும் எதிர்பார்க்காத வண்ணம் டாக்டர், பீஸ்ட் படத்தினை இயக்கிய நெல்சன் திலீப்குமாருக்கு சூப்பர் ஸ்டாரின்ன்169வது படத்தினை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் அனிரூத் இசையில் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ வீடியோ இணையத்தில் வெளியிட்டனர்.

இப்படத்தின் கதாநாயகி தேர்வில் பலர் பெயர் அடிப்பட்ட நிலையில் சூப்பர் ஸ்டார் கோடி செலவு ஆனாலும் சரி ஐஸ்வர்யா ராய் தான் வேண்டும் என்று கண்டீஷன் போட்டுள்ளாராம். அப்படி ஐஸ்வர்யா ராயையும் தூண்டில் போட்டு கோடியில் பேரம்பேசி கண்பார்ம் பண்ணிவிட்டனர்.

இந்நிலையில் டாக்டர், எதற்கும் துணிந்தவன் படத்தில் கதாநாயகியாக நடித்த பிரியங்கா மோகனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம். ரஜினிகாந்திற்கு தங்கையாகவோ, மகளாகவோ நடிக்கலாம் என்று கூறி வருகிறார்கள்.