ரஜினிகாந்துக்கு நோ.. தனுஷுக்கு ஓகே.. பிளான் போட்டு துக்கிய சிவகார்த்திகேயன் பட நடிகை..
தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி 100 கோடி வசூல் சாதனை படைத்த படம் டாக்டர். நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் மிகப்பெரியளவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
டாக்டர் , டான் - பிரியங்கா மோகன்
இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பிரியங்கா அருள் மோகன். இப்படத்தினை தொடர்ந்து, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் நடித்தார்.
இரு படங்களில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வந்த பிரியங்கா மோகன் நடிகர் ஜெயம் ரவியின் 50வது படத்தில் நடிக்க கமிட்டாகினார்.
ஜெயிலர் - நோ கேப்டன் மில்லர் - எஸ்
இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள ஜெயிலர் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளதாக செய்திகள் பரவியது.
ஆனால் அதெல்லாம் பொய்யான வதந்திகள் என்று பிரியங்கா மோகனே கூறியிருந்தார். இந்நிலையில், நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகவுள்ள கேப்டன் மில்லர் படத்தில் கமிட்டாகி இருக்கிறார்.
இப்படத்தின் பூஜை இன்று கோவாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகை நிவேதிதா சதிஷும் இப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

