கிளாமர் ரூட்டுக்கு மாறிய தனுஷ் பட நடிகை பிரியங்கா! புகைப்படத்தை பார்த்து வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

Dhanush Priyanka Arul Mohan Don Captain Miller
By Edward Dec 02, 2022 08:49 AM GMT
Edward

Edward

Report

கன்னட சினிமாவில் Ondh Kathe Hella என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தெலுங்கில் ஸ்ரீகாரம் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியங்கா அருள் மோகன்.

இதனைதொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழில் அறிமுகமாகினார். டாக்டர் படத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

இதன்பின் நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்தார். தற்போது நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

படங்களில் குடும்ப குத்துவிளக்கு பெண்ணாக நடித்து ரசிகர்களை ஈர்க்கும் வகையில் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார்.

தற்போது 28 வயதை எட்டிய பிரியங்கா மோகன் ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் படியான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.