கர்ப்பமா இருக்கிறாரா பிரியங்கா மோகன்? அவரே வெளியிட்ட புகைப்படங்கள்..
பிரியங்கா மோகன்
தமிழில் டாக்டன், டான், எதற்கும் துணிந்தவன், சரிபோதா சனிவாரம், கேப்டன் மில்லர், பிரதர் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக வளம் வருபவர் தான் நடிகை பிரியங்கா மோகன்.
சமீபத்தில் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியான ஓஜி படத்தில் முக்கிய ரோலில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடித்த பிரியங்கா தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பிரியங்காவின் AI தொழில்நுட்ப புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது. AI-ஆல் உருவாக்கப்பட்ட போலி புகைப்படங்களை பார்த்து பிரியங்கா மோகன் ஒரு விளக்கத்தை இணையத்தில் கொடுத்தார்.
கர்ப்பமா
தற்போது, பிரியங்கா மோகன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு டிரெண்ட்டாகி வருகிறது. ஆனால், அது ஓ.ஜி படத்தில் கர்ப்பமாக இருக்கும் போது எடுத்த புகைப்படம் தானாம். அப்புகைப்படங்களை பிரியங்கா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.






