கர்ப்பமாக இருக்கிறேன்.. நடிகை ரெஜினா சொன்ன பொய்யால் ஏமாந்த ஊழியர்!

Regina Cassandra Actress VidaaMuyarchi
By Bhavya Oct 18, 2025 10:30 AM GMT
Report

ரெஜினா கஸாண்ட்ரா

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்கள் நடித்து பிரபலமானவர் நடிகை ரெஜினா கஸாண்ட்ரா. கண்ட நாள் முதல் படத்தின் மூலம் அறிமுகமானார், பின் அழகிய அரசுரா படத்தில் நடித்தார்.

ஆனால் இவருக்கு இந்த இரண்டு படங்களுமே கை கொடுக்காத நிலையில் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வந்தார்.

அதன் பின், சிவகார்த்திகேயனுடன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் கொஞ்சம் ரீச் கொடுத்தது. கடைசியாக தமிழில் இவர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்திருந்தார்.

கர்ப்பமாக இருக்கிறேன்.. நடிகை ரெஜினா சொன்ன பொய்யால் ஏமாந்த ஊழியர்! | Regina About Her Lie Of Being Pregnant

ஏமாந்த ஊழியர்! 

இந்நிலையில், பேட்டி ஒன்றில் ரெஜினா பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், " ஒருமுறை பெங்களூருவில் இருந்தபோது, எனக்கு பிடித்த 'மிஸ்தி டோய்' சாப்பிட வேண்டும் என்று ஆசை இருந்தது. இதனால் பல கடைகள் தேடினேன். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.

அப்போது கடைசியில் ஒரு கடையில் அந்த இனிப்பைப் பார்த்தபோது, கடை மூடப்படும் நேரம் ஆகிவிட்டது.

கடை ஊழியர் இப்போது கடை மூடப்பட்டுவிட்டது, என்று சொல்லிவிட்டார். இதனால் வேறு வழி இல்லாமல் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று பொய் சொல்லிவிட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.       

கர்ப்பமாக இருக்கிறேன்.. நடிகை ரெஜினா சொன்ன பொய்யால் ஏமாந்த ஊழியர்! | Regina About Her Lie Of Being Pregnant