யார்-னு தெரியாமல் அங்க போய்ட்டேன்..நடிகை பிரியங்கா மோகன் ஓபன் டாக்

Priyanka Arul Mohan Tamil Actress Actress P. C. Sreeram
By Jai Apr 22, 2026 05:00 AM GMT
Report

பிரியங்கா மோகன்

கன்னடம், தெலுங்கு மொழிகளில் அறிமுகமாகி தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் போன்ற ஹிட் படங்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை பிரியங்கா மோகன். இதனையடுத்து, எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர், பிரதர்ஸ், ஓஜி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

யார்-னு தெரியாமல் அங்க போய்ட்டேன்..நடிகை பிரியங்கா மோகன் ஓபன் டாக் | Priyanka Mohan Recalls Meeting Pc Sreeram

சமீபத்தில் அவர் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான மேட் இன் கொரியா படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. சிம்பு - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் படத்தில் நடித்து வரும் பிரியங்கா மோகன் பேட்டியொன்றில் பேசிய விஷயம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

யார் என்றே தெரியவில்லை

அதில், ஒருமுறை பி.சி. ஸ்ரீராம் அலுவலகத்திற்கு வர சொன்னார்கள். எனக்கு அவரை யார் என்றே தெரியவில்லை. அவரது அலுவலகத்துக்கு சென்று அமர்ந்திருந்தேன். அப்போது அவர் பட போஸ்டர்கள் எல்லாம் ஒட்டப்பட்டு இருந்ததை பார்த்தேன். அனைத்தும் என் ஃபேவரேட் படங்கள்.

யார்-னு தெரியாமல் அங்க போய்ட்டேன்..நடிகை பிரியங்கா மோகன் ஓபன் டாக் | Priyanka Mohan Recalls Meeting Pc Sreeram

நான் எங்கே இருக்கிறேன் என்றே தெரியவில்லை. பின் அவர் யார் என்று கூகுள் செய்து பார்த்தேன். அப்போது பார்த்து சரியாக அவரும் வந்துவிட்டார். வந்ததும் என்னை பார்த்து, இவங்கள கமிட் செய்யலாம், இந்தப் பொண்ணுக்குள் ஏதோ இருக்கிறது என்று கூறினார். என்னை சில புகைப்படங்கள் எடுத்தார் என்று கூறியிருக்கிறார்.