விவாகரத்தான நடிகருக்கு ஜோடியாக 27 வயது நடிகை பிரியங்கா மோகன்..

Dhanush Priyanka Arul Mohan
By Kathick May 26, 2022 04:10 PM GMT
Report

தமிழ் சினிமாவில் தற்போது சென்சேஷன் நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா மோகன். இவர் தெலுங்கில் வெளிவந்த கேங் லீடர் படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்து அதன்பின், வெளிவந்த டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் என தொடர்ந்து சூப்பர்ஹிட் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து கொண்டிருக்கும் பிரியங்கா மோகன், அடுத்ததாகவும் முன்னணி நடிகருடன் இணையவிருக்கிறார்.

ஆம், முன்னணி நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கும், கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா மோகனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.