சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இனி பிரியங்கா கிடையாதா? இதுதான் காரணம்..
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பிரியங்கா டெஸ்பாண்டே. தொகுப்பாளினியாக உருவெடுத்த பிரியங்கா தன் உடல் எடையை கிண்டல் செய்தாலும் அதை சகஜமாக எடுத்து கொண்டு மக்கள் மனதை தனக்கென ஒரு பாணியால் தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் 5 சீசனில் கலந்து கொண்டு நல்ல வரவேற்பை பெற்று இறுதி வரை சென்று ரன்னராகினார். இதைதொடர்ந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சில வாரம் கழித்து ரீஎண்ட்ரி கொடுத்தார்.
இந்நிலையில் இந்த வாரம் நடைபெறும் சூப்பர் சிங்கர் எபிசோட்டில் பிரியங்கா கிடையாதாம். அவருக்கு பதில் ஆரம்பத்தில் மாகாபாவுடன் தொகுத்து வழங்கிய மைனா நந்தினி தான் தொகுத்து வழங்கியுள்ளார். பிரியங்கா தற்போது சக பிக்பாஸ் போட்டியாளர்களான மதுமிதா, பாவினி, அபிஷேக் ராஜா ஆகியோரும் ஹைதராபாத் டூர் சென்றுள்ளாராம்.
விமான நிலையம் முதல் ஹைதராபாத் ஓட்டல் வரை நடந்ததை அவரது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார் பிரியங்கா. இதன் காரணமாக தான் பிரியங்கா நிகழ்ச்சிக்கு வரவில்லையாம். கடந்த வாரம் தொடர்வாரா? இல்லை ஹைதராபாத்தில் இன்னும் சில வாரம் இருப்பாரா என்பது தெரியவில்லை.