திருமணமான பிறகு சுயரூபத்தைக் காட்டிய கணவன்!! வெறுப்பில் சீரியலில் இருந்து விலகிய நடிகை..
சன் தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி சமீபத்தில் முடிக்கப்பட்ட சீரியல் ரோஜா. 4 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியலில் ரோஜாவா நடிகை பிரியங்கா நல்காரி நடித்திருந்தார்.
தெலுங்கு சீரியலில் இருந்து தமிழில் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்ற பிரியங்கா நல்காரி தற்போது ஜீ தொலைக்காட்சியில் ஆரம்பிக்கப்பட்ட சீதாராமன் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ரோஜா சீரியல் முடிந்தப்பின் நடிகை பிரியங்கா ராகுல் என்பவரை 2018ல் நிச்சயம் செய்து, சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் சீதா ராமன் சீரியலில் நடித்து வந்துள்ள பிரியங்கா நல்காரி திடீரென விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சீரியலில் நடிப்பர்களிடம் கேட்டபோது ஆமாம், நீங்கள் கேள்விப்பட்ட உண்மை தான் என்று தெர்வித்துள்ளனர்.
திருமணம் முடிந்து சமீபத்தில் தான் பிரியங்கா கணவருடன் மலேசியாவுக்கு அவுட்டிங் சென்றார். இந்த மாதம் இறுதி வரைக்கும் தான் அவர் சீரியலில் நடிப்பார் என்றும் அவரது கணவருக்கு பிரியங்கா சீரியலில் நடிப்பதற்கு உடன்பாடில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
நான் நன்றாக சம்பாதிக்கிறேன், நீ நடித்தது போதும் என்று கண்டீசன் போட்டுள்ளார் ராகுல். அதனால் கணவர் சொல்வதை தட்டமுடியவில்லை. வேறு வழியும் இல்லை அதனால் சீரியலில் இருந்து பிரியங்கா விலக முடிவெடுத்துவிட்டார் என்று பிரியங்கா நல்காரி தரப்பில் கூறப்படுகிறது.