சூப்பர் சிங்கரே வேண்டாம்! எனக்கு இவங்க மட்டும் போதுமாம்! பிரியங்கா செய்த செயல்

supersinger priyanka television biggbosstamil5 pavni siby
By Edward Mar 10, 2022 04:30 PM GMT
Report

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு பிறகு அனைவரும் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தியும் அவுட்டிங் சென்றும் வருகிறார்கள். ஒருசில பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு செல்ல பிரியங்கா, பாவ்னி, அபிஷேக் ராஜா, மதுமிதா ஹைதராபாத் ட்ரிப் சென்றுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு வாரம் மட்டும் தொகுத்து வழங்கி வந்த பிரியங்கா அடுத்த வாரமே நிகழ்ச்சியை பற்றி கவலை கொள்ளாமல் ஊர்சுற்ற சென்றுவிட்டார். இதனால் நிகழ்ச்சிக்குழு அவருக்கு பதில் மைனா நந்தினியை மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறது.

இந்த சீசனில் இனி பிரியங்கா தொகுத்து வழங்குவதில் இருந்து நிறுத்தி வைப்பதாகவும் செய்திகள் வெளியானது. தற்போது பிரியங்கா சென்னைக்கு ரிடர்னாகியுள்ளார்.

நள்ளிரவில் நண்பர்களுடன் அட்ராசிட்டி செய்த வீடியோவை வெளியிட்டும் இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் மீண்டும் எப்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வருவீர்கள் என்று கேட்டு வருகிறார்கள்.