பிரியங்காவால் தூக்கி எறியப்பட்ட மாகாபா! சூப்பர் சிங்கரில் நிகழ்ச்சி போட்ட பிளான்.
பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. எப்போதும் நிகழ்ச்சியை மாகாபா ஆன்ந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கி வருவார்கள்.
கடந்த ஆண்டு பிக்பாஸ் 5ல் போட்டியாளராக பிரியங்கா சென்றதால் நிகழ்ச்சியை மாகாபாவுடன் மைனா நந்தினி தொகுத்து வழங்கி வந்தார். பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்துவிட்டு சில வாரங்களில் வந்தார்.
ஆனால் அடுத்த வாரம் ஹைதராபாத் டிரிப் சென்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வராமல் இருந்தார். இதனால் நிகழ்ச்சிக்குழு மீண்டும் மைனா நந்தினியை வைத்து நிகழ்ச்சியை நடத்தியது.
இந்நிலையில் பிரியங்கா மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். ஆனால் மாகாபா ஆனந்த் அவருடன் இல்லை. அவருக்கு பதில் கேபிஒய் குரேஷி பிரியங்காவுடன்சேர்ந்து தொகுத்து வழங்கி இருக்கிறார்.
மாகாபா பிரியங்காவிற்கு பதில் நடத்தி வந்த ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியை அவர் தான் தொகுத்து வழங்கியுள்ளார். அந்நிகழ்ச்சிக்கு வந்த மாகாபா, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போது எங்கே போனார் என்று பலர் கேள்வி கேட்டு வருகிறார்கள்.