அட்ஜெஸ்ட் பண்ண நடிகைகளை கூட்டிட்டு போனேன்? உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர்
சினிமாவில் வாய்ப்பிற்காக பல நடிகைகளிடம் காஸ்டிங் கவுச் பிரச்சனைகள் இருந்து வருகிறது. ஒருசில அப்படிபட்ட வாய்ப்பு வேண்டாம் என்று தூக்கி எறிந்தும் சில ஒப்புக்கொண்டு வாய்ப்பினையும் பெருகிறார்கள். அப்படி சில நடிகைகள் இப்படி செய்கிறார்கள் என்று வெளிப்படையாக பத்திரிக்கையாளர்கள் மூத்த பிரபலங்கள் கூட இணையத்தில் கூறி வருகிறார்கள்.
அட்ஜெஸ்ட்மெண்ட்
அந்தவகையில் தமிழ் சினிமாவை சேர்ந்த PRO வித்தகன் நடிகைகளுக்கு வாய்ப்புக்கேட்க கூட்டிசெல்வேன் என்று கூறியுள்ளார். சினிமா நட்சத்திரங்களுக்கும் யூடியூப்களுக்குக்கும் பி ஆர் ஓ வேலையை பார்த்திருக்கிறார். அப்படி ஒருசில நடிகைகளை நான் வாய்ப்பிற்காக இயக்குனர் தயாரிப்பாளர்களிடம் கூட்டிச்சென்று இருக்கிறேன்.
அப்படி ஒரு இயக்குனரிடம் நடிகையின் மாற்று பெயரை கூறி, அந்த நடிகை அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஒப்புக்கொள்ளக்கூடிய நடிகை கிடையாது என்று கூறினேன். சம்பளம் அதிகமாக கூட கொடுக்கிறோம் என்று அந்த இயக்குனர் கூறினார்.
அதன்பின் மீண்டும் கூட்டிச்சென்று பேசினேன். அப்போதும் ஸ்கிரீன் டெஸ்ட் ஷூட்டில் நன்றாக தான் அந்த நடிகை பெர்பார்ம் செய்தார். அதை தயாரிப்பாளரும் பார்த்து பாராட்டினார். ஆனால் அந்த இயக்குனர் மீண்டும் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி கேட்டார். இதை தயாரிப்பாளரிடம் கூறினேன். அவரும் வேறொரு படத்தில் நடிக்க வைக்கலாம் என்று கூறிவிட்டார்.
அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய ஓகே சொல்லிய நடிகை
இதைதொடர்ந்து இயக்குனரிடம் வேறொரு அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணும் நடிகையை கூட்டிச்சென்றேன். ஸ்கீரீன் டெஸ்ட்டில் சரியாக பண்ணாத அந்த நடிகையை ஓகே சொல்லி புக் செய்துவிட்டார் இயக்குனர். பிறகு நடிகை ஷூட்டிங் சென்று நடிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் இருந்து நடிகையின் அட்டூழியம் தாங்கமுடியாமல் குறை கூறி எனக்கு கால் செய்து இயக்குனர் பேசினார் என்று PRO வித்தகன் கூறியுள்ளார்.