துல்கர் சல்மானுடன் என்ன பிரச்சனை!! அதிர்ச்சியாகி பதிலளித்த நடிகை டொவினோ தாமஸ்...
டொவினோ தாமஸ்
மலையாள சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் டொவினோ தாமஸ். தற்போது அவர் நடிப்பில் ’பள்ளிச்சட்டம்பி’ என்ற படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இப்படத்தில் நடிகை கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தின் பிரமோஷனுக்காக சென்னை வந்துள்ள இருவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது நடிகர் துல்கர் சல்மானுக்கும் உங்களுக்கு என்ன பிரச்சனை என்ற கேள்வியை ஒரு கேட்டார். அதற்கு டொவினோ தாமஸ், நகைச்சுவையாகவும் சிரித்தபடி பதிலளித்தார்.
துல்கர் சல்மானுடன் என்ன பிரச்சனை
தனக்கும் அவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் எல்லாம் ரொம்ப நாட்களாக பழக்கம். தீவிரம் என்ற படத்தில் அவருடன் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறேன். அவருடன் வில்லனாகவும் நடித்திருக்கிறேன்.

அன்று முதல் இன்று வரை எனக்கு அவர் ஒரு இனிமையான ஒருவர். இதை துல்கர் சல்மான் கேள்விப்பட்டால் வாய்விட்டு சிரிப்பார். யாருங்க இதெல்லாம் கிளப்பி விடுறது. அவருடன் பேசிய வாட்ஸ் அப் சேட்டை காண்பிக்கட்டுமா.
இப்படி கொளுத்திவிடுவது ஈஸி, ஆனால் நாங்கள் இதையெல்லாம் படித்து உட்கார்ந்து சிரிப்பேன், நீங்கள் வேண்டுமானால் வாட்ஸ் அப் பாருங்கள். நாங்கள் எல்லாம் ஒன்றாக மேடையில் இருக்கும்போது எங்களிடம் கேள்வி கேளுங்கள், இதில் என்ன சந்தோஷம் கிடைக்கிறது என்று சரமாரியாக பதிலளித்திருக்கிறார்.