ருசிச்சி ருசிச்சி சாப்பிடும் பானிப்பூரில இவ்வளவு பிரச்சனை இருக்காம்!! சங்கூதும் சுகாதாரத்துறை..

Gossip Today
By Edward Jul 04, 2024 04:30 PM GMT
Edward

Edward

Report

மக்கள் என்னதான் வகைவகையான சாப்பாட்டுக்களை சாப்பிட்டாலும் வாய்ப்பு ருசியாக ஏதாவது ஒன்று சாப்பிட வேண்டும் என்று மனது அலைப்பாயும். அப்படி மாலை நேரத்தில் சாப்பிட வைக்கும் சாட் ஐட்டங்களில் ஒன்று தான் பானிப்பூரி. வடை பஜ்ஜி என்று சாப்பிட்டுக்கொண்டிருந்த நாம் தற்போது ருசிக்காக பானிப்பூரியை தினமும் வாங்கி சாப்பிடுகிறோம்.

அப்படி சாப்பிடும் பானிப்பூரியில் என்ன பிரச்சனைகள் இருக்கு தெரியுமா. நம் கண் முன்னால் செய்து தரும் பானியால் பல பிரச்சனை உருவாகி பெரிய ஆபத்தை சந்திக்க வைக்குமாம்.

ருசிச்சி ருசிச்சி சாப்பிடும் பானிப்பூரில இவ்வளவு பிரச்சனை இருக்காம்!! சங்கூதும் சுகாதாரத்துறை.. | Problems With Panipuri That Can Trigger Cravingsxxxxxx

 அது எப்படி என்றால், பானிப்பூரி விற்பனை செய்பவர்கள் சுகாதாரமற்ற வடிக்கட்டப்படாத நீரை பயன்படுத்துவதால், இரைப்பை பிரச்சனை, வயிற்றுப்போக்கு, நீர் மூலம் பரவும் நோய், டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்றவை வருமாம். அதேபோல் பானிப்பூரியில் பயன்படுத்தப்படும் ரசாயனத்தால் காலப்போக்கில் புற்றுநோயை கூட உண்டாக்குமாம்.

அதிக கலோரிகள் மற்றும் கொழுப்பு இருப்பதால் ஆரோக்கியமற்றதாக இருக்கும். உயர் ரத்த அழுத்தும், கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க செய்யும். இப்படி சுகாதரமற்று செய்யும் பானிப்பூரியை சாப்பிடாமல் வீட்டில் அல்லது சுத்தமாக இருக்கும் கடைகளில் மட்டுமே சாப்பிட வேண்டும் என்று சுகாதாராத்துறை ஆய்வில் கூறப்படுகிறதாம்.