நீயெல்லாம் நடிகனா இருக்க லாயக்கு இல்லை, யோகிபாபுவை கடுமையாக பேசிய தயாரிப்பாளர்
Yogi Babu
By Tony
யோகி பாபு
யோகிபாபு இன்று தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராகி விட்டார். காமெடி கதாபாத்திரம் தாண்டி கதையின் நாயகனாவும் அவர் பல படங்களில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் யோகி பாபு குறித்து பல வருடமாக சிலர், யோகி பாபு கால்ஷிட் கொடுக்க மறுக்கிறா, ப்ரோமோஷன் வர மறுக்கிறார் என புகார் கூறி வருகின்றனர்.
தற்போது கஜானா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கூட தயாரிப்பாளர் யோகி பாபு மீது கடுமையான விமர்சனம் வைத்துள்ளார்.
இதில் அவர் பேசுகையில் ‘யோகி பாபு இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை, அப்போ 7 லட்சம் அவருக்கு போகவில்லை என நினைக்கிறேன்.
7 லட்சம் கொடுத்தால் வந்திருப்பார், நீங்க நடிக்கும் படத்திற்கே ப்ரோமோஷன் வரவில்லை என்றால், நீங்க எல்லாம் ஒரு நடிகனா இருக்கவே லாயக்கு இல்லை’ என கடுமையாக பேசியுள்ளார்.