என்னுடைய பணத்தை திருப்பி கொடுங்க.. பாலாவிடம் கெஞ்சிய பிரபல தயாரிப்பாளர்
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருந்தவர் தான் வி.ஏ துரை. இவர் என்னம்மா கண்ணு, பிதாமகன், லவ்லி, விவரமான ஆளு, லூட்டி, கஜேந்திரா போன்ற படங்களை தயாரித்துள்ளார்.
இவர் தயாரித்த கஜேந்திரா படம் படுதோல்வி அடைந்தது. இதனால் வி.ஏ துரை தற்போது வீடு வாசல் கூட இல்லாமல் அவதி பட்டு வருகிறார்.

பணத்தை திருப்பி கொடுங்க
தற்போது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், நான் சினிமாவில் யாரிடமும் பணம் தரத் தேவையில்லை. இயக்குனர் பாலா சில வருடங்களுக்கு முன்பு என்னிடம் இருந்து 25 லட்சம் ரூபாய் வாங்கினார்".
"நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பொழுது பாலா, 'நீங்கள் பிதாமகன் படத்தில் கொடுக்க வேண்டிய பணம் தான் இது' என்று சில காரணங்களை கூறி திருப்பி தர மறுத்து விட்டார்".
இந்த சம்பவத்தை குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தேன். ஆனால் அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. பாலா சார் என்னிடம் இருந்து வாங்கிய பணத்தை திருப்பி தாருங்கள். மருத்துவ செலவுக்கு கூட என்னிடம் பணம் இல்லை" என்று கூறியுள்ளார்.
