சிவகார்த்திகேயனால் இத்தனை கோடி நஷ்டம்! உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..
தமிழ் சினிமாவில் மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் நடிகர் சிவகார்த்திகேயன். தொகுப்பாளராக இருந்து பின் நடிகராகி தற்போது முன்னணி இடத்தினை தன் உழைப்பால் பெற்று வந்தார் சிவகார்த்திகேயன்.
ஆரம்பத்தில் வெற்றியை கொடுத்து வந்த சிவகார்த்திகேயன் நயன் தாராவுடன் மிஸ்டர் லோக்கல் என்ற படத்தில் நடித்தார். ஞான வேல் ராஜா தயாரித்த இப்படத்தில் 15 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு 11 கோடியளவில் தான் சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் கொடுத்துள்ளார்.
மீதியுள்ள சம்பளத்தினை கொடுக்காமல் சம்பள பாக்கி தரவில்லை என்று சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் மீது புகாரளித்திருந்தார். இதுகுறித்து தயாரிப்பாளர் ஒரு மனுவினை கொடுத்துள்ளார். சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தியதால் மிஸ்டர் லோக்கல் படம் எடுக்கப்பட்டது.
மிஸ்டர் லோக்கல் படத்தால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் இதற்காக ஏற்பட்ட நஷ்டத்தால் விநியோகஸ்தர்கள் தரப்பில் பிரச்சனை ஏற்பட்டதாகவு கூறியுள்ளார். இப்படியிருக்கையில் சிவகார்த்திகேயன் சம்பளம் வேண்டாம் என்று கூறினார்.
தற்போது அந்த உண்மையை எல்லாம் மறைத்து வழக்கு தொடர்ந்துள்ளார். இப்படி ஒரு மனுவை தாக்கல் செய்த சிவகார்த்திகேயனுக்கு அபராதம் அளிக்க வேண்டும் என்றும், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ஞானவேல் ராஜா மனுவில் தெரிவித்துள்ளார்.